"மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்?" - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

"தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும்"
மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி
x
கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை அசாம் மாநிலத்துக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, அசாமுக்கு மாற்றப்பட்ட அமர்நாத்தை, 15 நாட்களில் தமிழகத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்