சரவெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்

தேர்தல் நேரத்தில் பட்டாசு விற்பனையில் சரிவு
சரவெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்
x
உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க தடை விதித்துள்ள நிலையில் வழக்கமாக, தேர்தல் காலங்களில் அதிகரித்திருக்கும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளது. தேர்தலை பொறுத்தவரை, அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்க, சரவெடிகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சரவெடிக்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதன் தயாரிப்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது.கடந்த மக்களவை தேர்தலின் போது, சிவகாசியில் சரவெடி விற்பனை, 500 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது சரவெடிக்கு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக, பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்