போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக வழக்கு - குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக வழக்கு - குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்
x
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுந்தரமூர்த்தி மனைவி வசந்தி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், சுந்தரமூர்த்தி உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில்,போலி என்கவுண்டர் என அறிவித்ததோடு, இதில் தொடர்புடைய 4 காவல் துறையினரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார். சுந்தரமூர்த்தியின் குடும்பத்துக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும்,  வழக்கை முறையாக விசாரிக்காத ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்