சி.சி.டி.வி. முறைகேடு வழக்கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாக பதியப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்
சி.சி.டி.வி. முறைகேடு வழக்கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
x
சென்னை சாலைகளில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாக பதியப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு, சென்னை போக்குவரத்து காவல் துறைக்காக, 40 சிக்னல்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி, லுக் மேன் என்ற நிறுவனம் பணிகளை துவங்குவதற்கு முன்பே, 90 சதவீத தொகையான 2 கோடியே 69 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு, கடந்த 8 வருடங்களாக பணிகளை செய்யாமல் இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்