காதல் திருமணம் செய்த மகள், மருமகனை கடத்த முயற்சி : பெண்ணின் தாய் உட்பட 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பதிவு : மார்ச் 14, 2019, 05:03 PM
கரூர் அருகே காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை கடத்த முயன்ற பெண்ணின் தாய் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், பிச்சம்பட்டியை சேர்ந்த சேதுராமனுக்கும், நிலக்கோட்டை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த கடந்தாண்டு அக்டோபர் 23ஆம் தேதி திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தை தொடர்ந்து அவர்கள் நான்கு மாதங்களாக வெவ்வேறு ஊர்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பிச்சம்பட்டிக்கு இருவரும் வந்ததை அறிந்த, சிவரஞ்சனியின் தாயார் ஜோதிமணி அவரது தங்கை ஸ்ரீதேவி மற்றும் உறவினர்கள் என மொத்தம் 9 பேர் பிச்சம்பட்டி வந்துள்ளனர். சிவரஞ்சனியை ஜோதிமணி மற்றும் அவரது ஆட்கள் அடித்து இழுத்து காருக்குள் போட்டுக் கொண்டு நிலக்கோட்டை நோக்கி சென்றனர்.  இந்த பரபரப்பில் ஸ்ரீதேவியை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் ஸ்ரீதேவியை அடித்து உதைத்து மாயனூர் போலீசில் ஒப்படைத்தனர். சிவரஞ்சனியை கடத்திய வழக்கில், புகார் பதிவு செய்த போலீசார் சிவரஞ்சனியை மீட்டதுடன் ஜோதிமணி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள பாண்டி மற்றும் சண்முகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

18 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

10 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

73 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

534 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

658 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1035 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.