தேர்தல் பிரச்சாரம் : நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு
பதிவு : மார்ச் 14, 2019, 04:11 PM
நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசார கூட்டத்திற்கு வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்து வர தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிளக்ஸ், கட் அவுட், பேனர்கள் வைக்க நீதிபதிகள் தடை விதித்தனர். தேர்தலின் போது அரசியல் கட்சியினர் பிரச்சார பொதுகூட்டத்திற்கு லாரி, வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பொதுமக்களை அழைத்து வரவும் நீதிபதிகள்  தடை விதித்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

57 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3781 views

பிற செய்திகள்

துவங்கியது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் : காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் "காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்" அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தொடங்கியது.

0 views

என்ஜின் கோளாறு - பழனியில் நின்ற பயணிகள் ரயில் : 3 மணி நேரமாக நிற்பதால், பயணிகள் அவதி

என்ஜின் கோளாறு காரணமாக, திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 3 மணி நேரத்திற்கு மேலாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

28 views

விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் மோசடி : குடியரசு தலைவரை சந்திக்க விவசாயிகள் முடிவு

350 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி, குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்த, கும்பகோண விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

22 views

3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

23 views

தேர்தல் பறக்கும் படையினரிடம் புஷ்பவனம் குப்புசாமி கடும் வாக்குவாதம்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் - புஷ்பவனம் குப்புசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.