தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் டாஸ்மாக்

வாக்காளர்களுக்கு மது விருந்து அளிப்பதை தடுக்க நடவடிக்கை
தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் டாஸ்மாக்
x
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து டாஸ்மாக் மூலமாக வாக்காளர்களுக்கு மது வழங்கப்படுவதை தடுப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, மது விலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார், சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தல் காலத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறித்த தகவலை தெரிவிக்கவும், முந்தைய மாத சராசரியை விட  30 % அதிக விற்பனை இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநில ஆயத்தீர்வைத் துறைகளுக்கு அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும், கொள்முதல் மற்றும் விற்பனை அளவு குறித்த தகவலை அளிப்பதோடு, மொத்தமாக மது வாங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி  உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்