மதுரையில் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரிக்கை

மதுரையில் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரையில் தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரிக்கை
x
பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18ம் தேதியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என கூறியிருந்தார். தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தலில் நூறு சதவீத வாக்காளர்கள் வாக்கு அளிக்குமாறு தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வரும் நிலையில், லட்சக் கணக்கானோர் திருவிழா சென்றால் எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பினர். மேலும், மதுரையில் தேர்தல் தேதியை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பதில் கேட்டு நாளை மறுநாள்  தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை  வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்