நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி போலீசார் கைது செய்தனர். கடந்த 331 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவி தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நிர்மலா தேவி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, தனி நபர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிர்மலாதேவி விரைவில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்