ஏப்ரல் 10க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க முடிவு

ஒன்றாம் வகுப்பு முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை வேலை நாட்களும், அதோடு தேர்வுகளும் உள்ளன.
ஏப்ரல் 10க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க முடிவு
x
ஒன்றாம் வகுப்பு முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை வேலை நாட்களும், அதோடு தேர்வுகளும் உள்ளன. ஆனால், ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பள்ளி பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நிறைவடையும். அதே நேரத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் முடிவு வெளியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவித்தபடி,   ஏப்ரல் 19ம் தேதியன்று 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்