கடன் தருவதாகச் சொல்லி பெண்களை திரட்டிய கட்சியினர்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒரு லட்சம் லோன் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்களிடம் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்த வினோதம் நடைபெற்றது.
கடன் தருவதாகச் சொல்லி பெண்களை திரட்டிய கட்சியினர்
x
மேகாலயா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் எபினேசர் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர் கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்களிடம் கடந்த சில நாட்களாக 30 ரூபாய் கட்டினால் ஒரு லட்ச ரூபாய் லோன் தருவதாகவும்,  அதை மாதம் 2000 வீதம் கட்டுமாறு சொல்லியிருந்தார். இந்நிலையில் 30 ரூபாய் பணம் கட்டிய பெண்களிடம் சாயல்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பணம் தருவதாக அழைத்துள்ளார்.  எபினேசர் கேட்டுக் கொண்டதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள்  அந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். ஆனால் பணம் கொடுக்கும் நிகழ்ச்சியாக இல்லாமல், கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  பெண்கள் பாதி கூட்டத்திலேயே வெளியேறினர்.கட்சி அறிமுகக் கூட்டத்துக்காக மேகாலயாவில் இருந்து  தேசிய மக்கள் கட்சியின் தேசிய செயலாளர் இந்திரா படூர் பாண்டே-வை வரவழைத்து தேசிய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக எபிநேசர் அறிமுகம் செய்வதற்காக நடைபெற்ற கூட்டதுக்காக  விநோதமான முறையில் ஆள் திரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்