தேர்தல் விதிமுறை மீறலும்... சி விஜில் செயலியும்...
பதிவு : மார்ச் 11, 2019, 09:39 AM
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார்களை சி விஜில் என்ற செயலி மூலம் அறிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
தேர்தல் என்றவுடன், அணி அணியாக வாகனப் பிரசாரம், பரிசுப் பொருள், பணப் பட்டுவாடா, வாக்களிப்பது என ஒருவித  திருவிழாவாக கருதப்படுகிறது. இதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு என்பதை மறந்து வேட்பாளரும் வாக்காளரும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக 'C Vigil' என்ற செயலியை தேர்தல் ஆணையம்  அறிமுகம் செய்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த செயலி முதன்முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தலிலும் இந்த செயலி மூலம் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil'செயலியை பதிவிறக்கம் செய்யலாம். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள், விருந்து வைப்பது, மிரட்டுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது, பொய்களை பரப்புவது, பணம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்கச் செய்வது விதிமீறல் விளம்பரம், பிரசாரம் போன்ற பல்வேறு நடத்தை விதிமீறல்கள் குறித்தும் இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம்.புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

பிற செய்திகள்

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

25 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

19 views

பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

22 views

சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

42 views

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.