குபேர ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பதிவு : மார்ச் 11, 2019, 09:36 AM
கோவை துடியலூரில் உள்ள குபேர ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு வேள்வி பூஜையும் தொடர்ந்து 108 வகை மூலிகையால் ஹோமமும் நடைபெற்றது. பின்னர்,கலசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கும்பத்திற்கு ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, சாமிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு வழிபாடு - முருக பெருமானுக்கு காவடி எடுத்த மக்கள்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி கிராமத்தில் முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடங்களை சுமந்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அந்த கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் காப்புக் கட்டிக்கொண்ட பத்தர்கள் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று முருகபெருமானை வழிபட்டனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரையான 28 நாட்களுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். பூத்தட்டுகள் ஏந்தியவாறு யானையுடன் ஊர்வலமாக பக்தர்கள் கோயில் வந்தடைந்தனர். தொடர்ந்து பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டு  புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

மதுரை மேலூர் அருகே மணியம்பட்டி இடையகருப்பசாமி கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டு சீறிப்பாய்ந்து சென்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
 

பிற செய்திகள்

'செளகிதார்' வார்த்தையை முன்வைத்து அரசியல்

செளகிதார் என்ற வார்த்தையை முன்வைத்து பாஜக தனது பிரசாரத்தை முன்வைத்துள்ள நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

52 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

40 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

501 views

திமுக தேர்தல் அறிக்கை : ராமதாஸ் கிண்டல்

தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக ராமதாஸ் கூறினார்.

31 views

பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

23 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.