மகளிர் விடுதிகள் சட்டம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மகளிர் விடுதிகளுக்கு வாடகை உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும் :சட்டம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
மகளிர் விடுதிகள் சட்டம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,அனைத்து மகளிர் விடுதிகளையும் ஒழுங்குபடுத்தும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது.இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மகளிர் நலனில் அரசுக்கு அக்கறை இருந்தால் மகளிர் விடுதிகளுக்கு வாடகை உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும்.இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இதனையடுத்து  சட்டம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Next Story

மேலும் செய்திகள்