மின்வாரிய அலுவலகம் முன் விவசாயி தற்கொலை முயற்சி : கருகும் பயிரை காப்பாற்ற முடியவில்லை என வேதனை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மின் வாரிய அலுவலகத்தில்,மின்சாரம் வழங்க கோரி விவசாயி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய அலுவலகம் முன் விவசாயி தற்கொலை முயற்சி : கருகும் பயிரை காப்பாற்ற முடியவில்லை என வேதனை
x
கழவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், தமது 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக விவசாய நிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வேதனை அடைந்த கண்ணன், தமது குடும்பத்தினருடன் ஜெயங்ககொண்டம் மின்வாரிய அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்திய போது, பயிர்கள் கருகுவதை தம்மால் காண முடியவில்லை என கூறியது  காண்போரை கண் கலங்க செய்தது.

Next Story

மேலும் செய்திகள்