தொடங்கியது கோடைக்காலம் - சூடு பிடித்த மண்பாண்ட விற்பனை

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஆரோக்கியமான, குளிர்ந்த குடிநீர் குடிக்க வேண்டும் என்றால் மக்கள் நாடுவது மண் பானைகள்தான்.
தொடங்கியது கோடைக்காலம் -  சூடு பிடித்த மண்பாண்ட விற்பனை
x
வழக்கமாக ஏப்ரல் , மே மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிற நிலையில், இப்போதெல்லாம் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. இதனால் ஆரோக்கியமான குளிந்த குடிநீர் குடிப்பதற்காக  மக்கள் மண்பானைகளை தேடி வாங்கத் தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மண்பானை விற்பனையாளர்களிடம் வந்துள்ள வித விதமான மண்பானைகள் மக்களைக் கவர்ந்து வருகின்றன. கால மாற்றத்துக்கு ஏற்ப வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளதுடன்,  குழாய் பொருத்தப்பட்ட மண்பானை,  சிறிய மற்றும் பெரிய அளவிலான  குடுவைகள், வட்டவடிவிலான பானைகள் என பல வகைகளில் வந்துள்ளன.   மக்களின் ஆர்வத்துக்கு ஏற்ப மண்பானைகள் உற்பத்தி செய்து அசத்துகின்றனர் உற்பத்தியாளர்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற மண்பானைகளை தயரானாலும், மானாமதுரையில் தயாராகும் மண்பானைகளுக்கு தமிழகம் அளவில் நல்ல வரவேற்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.   இங்கு மண்பானைத் தொழிலில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ள நிலையில் சீசனுக்கு ஏற்றதுபோல பானைகள் தயார் செய்து விற்பனை செய்வதாகவும்,  வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச் செல்வதாகவும் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்