கவின் கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா - 5 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவம்

சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கவின் கேர் நிறுவனம், விருதுகள் வழங்கி கௌரவபடுத்தி வருகிறது
கவின் கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா - 5 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவம்
x
மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பெறவும், அவர்களது திறமைகளை இந்த உலகம் அறியும் பொருட்டும், சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கவின் கேர் நிறுவனம், விருதுகள் வழங்கி கௌரவபடுத்தி வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் 17-வது கவின் கேர் எபிலிட்டி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், டேனிஷ், மகாராஜன்,  வெங்கடாசலம், மேஜர் தேவேந்திர பால் சிங், அக்சய் பட்நாயக் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. கவின் கேர் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.கே. ரங்கநாதன், எபிலிட்டி பவுண்டேஷன் நிறுவனர்  ஜெயஸ்ரீ ரவீந்திரன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்