மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்
x
லாரிகளுக்கு மணல் அள்ள அனுமதிக்கும் காவல்துறையினர், மாட்டு வண்டிகளுக்கு அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டி, மணல்மேடு பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் தலைமையில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக மாட்டு வண்டி உரிமையாளர்கள், மாட்டு வண்டிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், மாடுகளை அவிழ்த்து விரட்டி விட்டு, மாட்டு வண்டிகளை ஓட்டிச்சென்றனர். இதனால் மாடுகள் அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடின. அதேபோல, மாட்டு வண்டி உரிமையாளர்களையும் விரட்டி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்