கஜா புயல் பாதிப்பு - மலைவாழ் மக்களின் அவல நிலை

திண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தார்பாய் மற்றும் சேலைகளில் மேற்கூரை அமைத்து மண் சுவர் எழுப்பி வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
கஜா புயல் பாதிப்பு - மலைவாழ் மக்களின் அவல நிலை
x
ஒட்டன்சத்திரம் பூதமலைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கஜாபுயலால்இப்பகுதியில்உள்ளவீடுகளின்மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.மரங்கள் சாய்ந்ததால், வீடுகளை இழந்து, இப்பகுதி மக்கள் இருக்க இடம், உண்ண உணவின்றி தவிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், இதுவரைதார்பாய்தவிரவேறுஎந்தநிவாரணப்பொருட்களும்வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டும் இவர்கள், இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி, தங்களின் வீடுகளை சரி செய்ய வசதி இல்லாமல், தார்பாய்களையும் சேலைகளையும் வைத்து மேற்கூரை அமைத்து, கூடை பின்னும் குச்சிகளை வைத்து அவற்றில் மண் பூசி வாழை மட்டைகளை பின்னி சுவர் எழுப்பி, வாழ்ந்து வருகின்றனர். மலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இதே சூழ்நிலை நிலவுவதால்மாவட்டநிர்வாகம்அவர்களின்வீடுகளைசரிசெய்து,நிவாரணப்பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்