முகிலன் மாயமான விவகாரம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகிலன் மாயமான விவகாரம் : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
x
மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயர் அதிகாரிகள் பலரின் தொடர்பு குறித்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட  முகிலன்,  கடந்த 16 ஆம் தேதி சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயிலில் பயணித்ததாகவும், அதன் பின் மாயமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயண‌ன், நிர்மல்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 16 ஆம் தேதி முகிலன் ரயிலில் பயணிக்க வில்லை என்றும் கூடுவாஞ்சேரிக்கு பிறகு அவருடைய செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என எழும்பூர் காவல்துறை தெரிவித்த‌து. இதையடுத்து,   எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்த‌து தொடர்பான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள், உத்தரவிட்டனர். விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 4 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்