ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வீடுகளில் சோதனை

சென்னை மற்றும் வேலூரில் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வீடுகளில் சோதனை
x
வேலூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் தனியார் பால் நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் வேலூர் மற்றும் காட்பாடியில் கட்டுமான சங்கங்களின் அகில இந்திய தலைவர் ராமமூர்த்தியின் வீட்டிலும் வருமானத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் டெல்லியிலிருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் 31 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்