நெல்லை மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆடியோ
பதிவு : பிப்ரவரி 20, 2019, 07:13 PM
நெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில  கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நேரத்தில், அலுவலகங்களில் இல்லாத‌தால்,  விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தோடு, புகார் மனுக்களையும் அளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இந்த எச்சரிக்கை ஆடியோவை நெல்லை மாவட்ட ஆட்சியர் அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.