கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் : காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 07:06 PM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை தெரிவித்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையில் குறுக்கிடும் வகையில் செயல்பட்டதால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்ததாக காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனோஜ், சயான் மனுவுக்கு பதிலளிக்கும்படி கோத்தகிரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பிப்ரவரி 25 வரை இருவரையும் கைது செய்ய கூடாது என  உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.