அமைச்சர் செங்கோட்டையன் உறவினர் என கூறி மோசடி
பதிவு : பிப்ரவரி 20, 2019, 06:53 PM
அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் நகைக்கடை நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் வசூல் செய்துள்ளது. கோவை மட்டுமின்றி கோபிசெட்டிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிறுவனம் தனது கிளைகளை திறந்ததால் இதை நம்பிய மக்கள், பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் அமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் என கூறியதாகவும், பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை திருப்பி தராததால் அதிர்ச்சியடைந்த மக்கள், அந்த நிறுவனம் குறித்து கோவை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.