நிலக்கரி இறக்குமதியால் சுற்றுச் சூழல் பாதிப்பு : மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

காரைக்கால் தனியார் துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நிலக்கரி இறக்குமதியால் சுற்றுச் சூழல் பாதிப்பு : மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
x
காரைக்கால் தனியார் துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை  மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால், சுற்றுவட்டார பகுதிகளில் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக  மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில்,  நாகூரை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவர் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமை தீர்பாணையம் உத்தரவுபடி, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நாகூரில் ஆய்வு நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்