"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 05:01 AM
அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில்  மக்கள் சந்திப்பு  பயணத்தை தொடங்கினார். சூரம்பட்டிவலசு -வெள்ளோடு - அவல்பூந்துறை - மொடக்குறிச்சி - சிவகிரி - சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுக - பா.ஜ.க கூட்டணி என்பது தமிழக மக்கள்  விரும்பாத அரசுகள் அமைக்கும் கூட்டணி என்றார். 40   தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அமமுக சில கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது, தேர்தல் அறிவித்தவுடன் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.