டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:18 AM
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்களூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்த பணம் ஒன்றரை லட்ச ரூபாயை ஊழியர் மகரஜோதி எடுத்துக்கொண்டு, நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் கும்பல், அவரை கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த மகரஜோதியை அப்பகுதி மக்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் ஊத்தங்கரை அருகே காட்டேரியில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு லட்சத்து 40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. அதே பகுதியில் 2வது முறையாக டாஸ்மாக் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

10 views

துவங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது.

14 views

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட , சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

203 views

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு

மதுராந்தகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

14 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

51 views

இன்று தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் - அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.