பாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி

உயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி
பாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி
x

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் அருகே கார்குடிக்கு சற்று நேரத்தில் கொண்டு வரப்படுகிறது. 

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொடைக்கானலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மூஞ்சிக்கல் மற்றும் அண்ணாசாலை பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டனர்.

"தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்" -  நிதி உதவி அறிவித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 44 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். வீரர்களை நாடு இழந்து தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி 
ஜம்மு காஷ்மீரில், தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த  ராணுவ வீரரின் சிவசந்திரன் உடலுக்கு பெரம்பலூரில் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிவசந்திரனின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பெரம்பலூர் நான்கு ரோட்டில் திரண்டிருந்த ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்