கொட்டும் பனியில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக நாராயணசாமி தர்ணா
பதிவு : பிப்ரவரி 16, 2019, 02:35 AM
பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக கூறினார். தாமும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், இன்று, 12 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார். நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறிய அவர் போராட்ட பட்டியலை  வெளியிட்டார்.  இதனிடையே, ஆளுநர் மாளிகை முன்பு, தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். 4-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ள அவர், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், சாலையில் படுத்துறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.