"2 ஆண்டு சாதனையை கொண்டாடும் அதிமுக அரசு" - ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 16, 2019, 01:28 AM
அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு பயன்பட கூடிய வகையில் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். பின்னர் பேசிய ஸ்டாலின், முதியோர் உதவி தொகை முறையாக வழங்கப்படவில்லை என்றார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தகுதிவாய்ந்த அனைவருக்கும் முதியோர் உதவிதொகை வழங்கப்படும் என கூறினார். மேலும், மத்தியில் திமுக விரும்பும் ஆட்சி வந்தவுடன் கல்விக் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின்  உறுதியளித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.