மணல் கொள்கையை எதிர்த்து வேலை நிறுத்தம் - மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 14, 2019, 04:41 AM
மாற்றம் : பிப்ரவரி 14, 2019, 04:43 AM
மார்ச் 19 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழக அரசின் மணல் கொள்கையை எதிர்த்து  மார்ச் 19 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், ஆன்லைன் வழியாக 6 மாதங்களுக்கு முன்னரே பணம் கட்டிய நிலையில், இன்று வரை தமிழக அரசு மணல் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.