"மண்டல வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்" - அதிமுக
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:35 AM
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டங்கள் மண்டலம் வாரியாக நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மண்டல வாரியாக, அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் 15ம் தேதி  முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசின் இரண்டாண்டு சாதனைகளை மக்களிடம் கட்சி நிர்வாகிகள்  எடுத்துரைத்துக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடை தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்து மண்டல வாரியாக அம்மா பேரவை நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

"அரசு வேலை பெற பணம் கொடுப்பவர் மீதும் குற்ற நடவடிக்கை" - பொது அறிவிப்பு வெளியிட டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

9 views

விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

11 views

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.