போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது வழக்கு
பதிவு : பிப்ரவரி 14, 2019, 02:41 AM
நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினரின் மகன் அல்ல என கூறி, நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா முன்பு விசாரணைக்கு வந்தது.  பின்னர் மார்ச் மாதம் 4 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன், தம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்து,  தனுஷ் தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக புகார் தெரவித்தார். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் கதிரேசன் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.