நெடுஞ்சாலையில் பேனர்கள் - தடையை மாற்றியமைக்க கோரிக்கை
பதிவு : பிப்ரவரி 14, 2019, 02:20 AM
பேனர் தடை வழக்கு- அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலைகளில் பேனர்கள் வைக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த சென்னை நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பல ஆண்டுகளாக நடந்து வரும் விதிமீறல்களை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் குறிப்பிட்டனர். இதுசம்பந்தமாக கூடுதல் மனு தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதற்கிடையில், பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, பேனர்கள் வைக்க ஏதுவாக ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை மாற்றியமைக்க கோரி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா மற்றும் அருள்மொழிதேவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு மார்ச் 15ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.