திருமண விழா பேனர் வைத்த‌தில் தகராறு : மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:32 AM
அரியலூரில் திருமணவிழா பேனர் வைத்த‌தில் இருதரப்பினர் இடையே எழுந்த மோதல், மருத்துவமனை வரை தொடர்ந்த‌தால், நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் கிராமத்தில்  திருமண வரவேற்பு பேனர் வைத்த‌தில், திமுகவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி முன்னாள் தலைவர் இளையராஜாவுக்கும்,  பண்ணை ராஜா என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இதில், படுகாயம் அடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையிலும் , இருதரப்பினர் இடையே அடிதடி சண்டை உருவானது. இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.