காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படவில்லை - புதுக்கோட்டை நகர மக்கள் புகார்

காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புதுக்கோட்டை நகர மக்கள் புகார் கூறுகின்றனர்.
காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படவில்லை - புதுக்கோட்டை நகர மக்கள் புகார்
x
புதுக்கோட்டை நகரில் வசிக்கும் 5 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்க காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் முறையாக செயல்படாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பருவமழை பொய்த்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல் மூலமும் தண்ணீர் கிடைக்கவில்லை எனக் கூறிய மக்கள் ஒரு குடம் தண்ணீர் 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விலைக்கு வாங்கி குடிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். கோடைகாலத்திற்குள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புதுக்கோட்டை நகர மக்களின் கோரிக்கையாகும். 


Next Story

மேலும் செய்திகள்