டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் - சட்டப்பேரவையில் கோரிக்கை

டிக்டாக் செயலியை பலரும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு...
டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் - சட்டப்பேரவையில் கோரிக்கை
x
சமீப காலத்தில் டிக் டொக் என்ற செயலி மிகப் பிரபலமாக மாறி விட்டது. இதில் ஆபாசமாகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் பலர் பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில் இதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது ஒரு ஆன்ட்ராய்டு செயலி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே மியூசிக்கலி என்ற பெயரில் இயங்கி வந்த இந்த செயலியானது டிக் டொக் என பெயர் மாற்றப்பட்டதும், மிகப் பிரபலமடைந்து விட்டது. சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது இந்த செயலி. மிகுந்த பொழுது போக்கை தரக்கூடியதாக கருதப்பட்ட இந்த செயலியை சிலர் ஆபாசமாகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவதாக மெல்ல புகார்கள் எழத் துவங்கின. இளைஞர்கள், இளம்பெண்களிடம் இந்த செயலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அதிக நேரத்தை இதில் செலவிட தொடங்கினர். ஆதரவு ஒரு பக்கம் பெருகிய நிலையில் எதிர்ப்பும் ஒரு புறம் வேகமாக பரவியது. தற்போது இந்த செயலியை தடை செய்ய வேண்டுமென சட்டப்பேரவை வரை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தடை செய்தால் மட்டும் இதற்கு தீர்வு கிடைத்து விடுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. காரணம், இதேபோன்ற ஸ்மியூல், டப்மாஷ், லைக் போன்ற  பல செயலிகள், நடைமுறையில் இருக்கின்றன. வளர்ந்து வரும் டெக்னாலஜியில் இதுபோன்ற செயலிகளை தடை செய்வதால் மாற்றங்களை கொண்டு வர முடியுமா? என்ற கேள்வியும் இங்கே பிரதானமாக நம் முன் வைக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்