அரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:40 AM
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் செங்குட்டுவேல், வரும் 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பாலை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.