சாக்கு பையை வைத்து விளையாடிய சின்னதம்பி யானை
பதிவு : பிப்ரவரி 13, 2019, 02:13 AM
சாக்கு பையை வைத்து சின்னதம்பி யானை விளையாடியது கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் கடந்த 4 நாட்களாக முகாமிட்டு வரும் காட்டு யானை சின்னத்தம்பி, கரும்பு தோட்டத்தில் இருந்து வாழைத்தோட்ட பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
அங்கிருந்த சாக்குப்பையை எடுத்து அது விளையாட தொடங்கியது.
தும்பிகையால் சாக்கு பையை எடுத்து தலையில் போட்டுக் கொள்வதும்,  மேலே சுழற்றி வீசி வாலால் பிடிப்பதும், பின்னங்கால்களால் உதைப்பதும் 
என சின்னத்தம்பி  விளையாடியதை கண்ட பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். எனினும் அது ஆனந்தமாக விளையாடுகிறதா ஆக்ரோஷமாக சாக்குப் பையை வீசுகிறதா என்று புரியாமல் வனத்துறையினர் திகைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.