தந்தையை அடித்து கொலை செய்த மகன்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 02:02 AM
திருவெறும்பூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியை சேர்ந்த  குணசேகரன் என்பவர் மது அருந்தி விட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மகன் சுதர்சனுக்கும், குணசேகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  சுதர்சன், தனது தந்தை குணசேகரனை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த குணசேகரனை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்துள்ள திருவெறும்பூர் போலீசார், சுதர்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.