முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

மதுரை மாவட்டத்தில் முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை
x
கடந்த 2015 - 2016 ஆம் ஆண்டு, 6 ஆயிரத்து 777 பேரிடம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வழங்கியதாக மதுரை வடக்கு போக்குவரத்து வட்டார கழக முன்னாள் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. சுமார் 10 கோடியே 17 லட்ச ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக போக்குவரத்து கழக அதிகாரி கல்யாண குமார், மோட்டர் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், 17 பேரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்