பேருந்தில் சக பயணி போல் பயணித்து கொள்ளை
பதிவு : பிப்ரவரி 12, 2019, 11:29 AM
பேருந்துகளில் பயணம் செய்து சகப்பயணிகள் போல் நடித்து கைப்பைகள் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில்  தனியார் பேருந்தில் ஒரு இளைஞர் பெண்ணின் கைப்பயை  நைசாக பேசி பறித்து தப்பிச்சென்றுள்ளார். கைப்பயை பறிகொடுத்த பெண் சத்தம் போட, திருடன் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நண்பனுடன் தப்பிவிட்டான். இதை அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் பார்த்து திருடர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களில் ஒருவனை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார். பிடிப்பட்ட திருடனை மரத்தில் கட்டி வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவனிடம் விசாரிக்கையில், பேருந்துகளில் இதுபோன்று திருடி பேருந்தை பின்தொடர்ந்து வரும் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து திருடனை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தப்பி ஓடிய இன்னொரு திருடனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

980 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3402 views

பிற செய்திகள்

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

4 views

விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

6 views

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

15 views

அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் கடிதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அ.தி.மு.க தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.