லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி மீதான புகார் : "6 மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை" - நீதிமன்றம் அதிருப்தி

லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி அளித்த புகார் மீது 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி மீதான புகார் : 6 மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை -  நீதிமன்றம் அதிருப்தி
x
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர்  பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முருகன், சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், முருகனை பணிமாற்றம் செய்ய கோரி பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகார் அளித்து 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார். மேலும், குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள மூத்த ஐஏஎஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்ட குழுவை தமிழக அரசு ஏன் அமைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்