பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவரிடமும் இல்லை - ஆனந்த சங்கரி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவரிடமும் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவரிடமும் இல்லை - ஆனந்த சங்கரி
x
முல்லை தீவு வற்றாப்பளை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், விடுதலை புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ஏனைய கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினர்  வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஆனால் விடுதலைபுலிகள் மீது குற்றம்சாட்டியதாகவும் அவர் கூறினார். ஆனால் குற்றச்சாட்டுகளை தட்டிக்கழிக்காமல் அந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதாக பிரபாகரன் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்