பேருந்தில் சக பயணி போல் பயணித்து கொள்ளை
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:20 AM
பேருந்துகளில் பயணம் செய்து சகப்பயணிகள் போல் நடித்து கைப்பைகள், தங்க நகைகளை கொள்ளையடிக்கும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில்  தனியார் பேருந்தில் ஒரு இளைஞர் பெண்ணின் கைப்பயை  நைசாக பேசி பறித்து தப்பிச்சென்றுள்ளார்.  கைப்பயை பறிகொடுத்த பெண் சத்தம் போட, திருடன் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நண்பனுடன் தப்பிவிட்டான். இதை அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் பார்த்து திருடர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களில் ஒருவனை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார். பிடிப்பட்ட திருடனை மரத்தில் கட்டி வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவனிடம் விசாரிக்கையில், பேருந்துகளில் இதுபோன்று திருடி பேருந்தை பின்தொடர்ந்து வரும் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து திருடனை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தப்பி ஓடிய இன்னொரு திருடனை தேடி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.