திமுக நிர்வாகி வெட்டி படுகொலை
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:15 AM
திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம்  பகுதியை சேர்ந்தவர் டி.ஆர்.ஆர்.ரமேஷ்.  திமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட்,  டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று தமது அலுவலகத்தில் இருந்த ரமேஷை, ஆட்டோவில் வந்த முகமுடி அணிந்த மர்ம நபர்கள் சரமாரியாக  வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து ரமேஷ்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.
ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கே இருந்தவர்கள் ஓடி வந்தபோது, அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய மர்மகும்பல் அங்கிருந்து  தப்பிச்சென்றது. கொலையாளிகளை பிடிக்க 3  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.