பொய் வழக்கில் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட விவகாரம் : காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்

அம்பத்தூர் காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொய் வழக்கில் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட விவகாரம் : காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்
x
நிலப்பபிரச்சனை தொடர்பாக பொய் வழக்கில் டிரைவரை கைது செய்த அம்பத்தூர் காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை அம்பத்தூரை அடுத்த ஓரகடத்தைச் சேர்ந்த டிரைவர் வேலனை, நிலப் பிரச்னை தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொய் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், முறையாக விசாரிக்காமல் கைது சிறையில் அடைத்துள்ளார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி  மாநில மனித உரிமை ஆணையத்தில் வேலன் புகார் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி துரை.ஜெயசந்திரன், முறையாக விசாரிக்காமல் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட  காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும்,  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரியும் உத்தரவிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்