வடமாநிலங்களைச் சேர்ந்த ஏ.டி.எம். திருடர்கள் கைது

ஸ்கிம்மர் கருவி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் திருடிய வடமாநில கும்பல் சென்னையில் பிடிபட்டுள்ளது.
வடமாநிலங்களைச் சேர்ந்த ஏ.டி.எம். திருடர்கள் கைது
x
நவீன யுகத்தில் திருட்டும் நவீனமாகி போய்விட்டதே என்பது பணம் வைத்திருப்போரின் கவலை. சேமிக்கும் கொஞ்சப் பணத்தை, பாதுகாப்பாக வங்கியில் வைப்பது சாமான்யர்களின் வழக்கம். ஆனால் அதையும் தடயமின்றி சுரண்ட வழி உண்டு என்பதே நவீன கால பேரச்சம். இதை ஏற்படுத்திய  5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். வங்கி ஏடிஎம்களில் வழக்கமான ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட்டோடு அல்லாமல், ரகசிய கேமரா மூலம் கடவு எண்களையும் திருடியுள்ளது அந்த கும்பல் இந்த தகவலுடன் வெளிமாநிலங்கள் செல்லும் அந்தக் கும்பல், அங்குள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை லட்சக் கணக்கில் சுருட்டியுள்ளது. ஒரு மாநிலத்தில் திருடும் தகவலை வைத்து வேறு மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் தந்திரமாக மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து விசாரித்து வந்த கொல்கத்தா போலீசார் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து அவர்களை  கைது செய்தனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் 3 பேர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதும், மூளையாக செயல்பட்டது ஜார்கண்டைச் சேர்ந்த விஜயகுமார் மண்டல் என்பதும் தெரியவந்தது. இவர்கள் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் தகவல்களை திருடியும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை முடக்கியும் கைவரிசை காட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்