தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், இன்று தொடங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது
x
2019 - 20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை, 10 மணிக்கு, தமிழக சட்டப் பேரவை கூடுகிறது. இன்று தொடங்கும் பட்ஜெட் மீதான விவாதம், 13ஆம் தேதி வரை, நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவார்கள். அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நாளான, 14ஆம் தேதி துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம் விவசாயிகள் பிரச்சினை, தொழில் வளர்ச்சி, கடன் சுமை அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி எதிர்க்கட்சியினர் பேசும்போது பட்ஜெட் விவாதத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்