நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்திய ஆற்குட்டி எம்.எல்.ஏ
பதிவு : பிப்ரவரி 11, 2019, 01:01 AM
கோவை மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் அரங்கநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
கோவை மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் அரங்கநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்காக பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் கோபுரம், அம்மன் கோபுரம், ராஜ கோபுரங்களில் உள்ள விமான கலசங்களில் ஊற்றப்பட்டது. அதனைதொடர்ந்து பெருமாள் மற்றும் அம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அபிசேக பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, நடன குழுவினருடன் நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.